காரைக்கால் அம்மையின் தரிசனம்
கொங்கை
திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண்
வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி
சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர்
நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி
யலறி யுலறு காட்டில்
தாழ்சடை
எட்டுத் திசையும் வீசி
அங்கங்
குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப
னிடந்திரு ஆலங் காடே.
---காரைக்கால் அம்மையார்
---காரைக்கால் அம்மையார்
முலைகள் வற்றி சரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்த தலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும் திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம் குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.
-----------------------------------------------------------------------------

