Sunday, August 14, 2011



ஓஷோ சொன்ன ஜோக்

இளம் அறுவைசிகிச்சை மாணவர்களுக்கு பேராசிரியர் பாடம் எடுத்தார். “மாணவர்களே அறுவை சிகிச்சை நிபுணன் ஆவதற்கு அருவறுப்பு அடையாத மனநிலையும் மிகுந்த கவனம் தேவை. சரி உங்களுக்கு ஒரு சோதனை. நான் இப்போது செய்வதை கவனமாகவும் அருவருப்பு அடையாமலும் கவனித்து அதேபோல் செய்யவேண்டும்.”

டேபிளில் போர்த்தியிருந்த துணியை விலக்கினார். பாடம் செய்யப்பட்ட இறந்த உடல் நிர்வாணமாக இருந்தது. கையில் உறையை மாட்டிக்கொண்டு பிணத்தின் குதத்திற்குள் விரலைவிட்டு வெளியே எடுத்து அப்படியே தன் வாயில் வைத்து சப்பினார்.

மாணவர்கள் உறைந்தனர், அருவருப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

“மாணவர்களே நான் செய்ததைப் போன்றே யார் செய்ய முன்வருகிறீர்கள்?” பேராசிரியர் கேட்டார்.

ஒரு அவசரகுடுக்கை மாணவன் மட்டும் கையை தூக்கினான்.அவனும் கையில் புதிய உறையை மாட்டிக் கொண்டு அதேபோல் விரலை விட்டு எடுத்து வாயில் வைத்து சப்பினான்.

பேராசிரியர்.”வெல்டன். நான் உன்னை பாராட்டுகிறேன். உனது தைரியத்திற்காக. இருந்தாலும் உனக்கு கவனம் பத்தாது. உன்னால் நிபுணனாக முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் நான் விட்டது ஒரு விரல் சப்பியது வேறொரு விரலை.

Thursday, August 11, 2011

அழட்டும் குழந்தைகள்


குழந்தைகள் பசியால் தவிர
அவர்கள் அழுவது எனக்கு
புரிந்ததில்லை எப்போதும்...

உலகம் அதற்குள் சலித்து விடுகிறதா

விரும்பாத சப்தங்களால் அவர்கள்
உலகு கலைவதாலா

சுவாரசியமற்ற காட்சிகளாலா

இருந்தாலும் அவர்கள்

உதடு குவித்து
கண்களில் நீர் கோர்த்து
பிஞ்சு விரல்களை மடக்கி
பந்து போல் முஷ்டி செய்து

அவர்கள் அழுகைக்கு தயாராகும்போதும்
எவ்வளவு அழகு....

அதற்காகவே அழட்டும்
சிறிது நேரம்

அழகிய உலகம்


குழந்தைகளின் உலகே தனியானது

எவ்வளவு முயற்சித்தாலும்
நம்மால் அதில்
எட்டிக்கூட பார்க்க முடிவதில்லை

தொட்டிலில் விழித்திருந்து
தனிமையில்
உதடுகளில் நீர் வழிய
இரு கைகளிலும் காற்றை
இறுக பற்றிக் கொண்டு
உடல் முழுவதும் சிரிப்பாக
புரியாத மொழியில்
எந்த தேவதையுடன் உரையாடுகிறார்கள்

குழந்தைகளின் உலகே அலாதியானது.

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com